Tuesday, November 9, 2010

பிற்பகல் விளைந்தது

நகரின் தலை சிறந்த மருத்துவமனை.தன் முன் ஓளிரும் டிஜிட்டல் தேதி 09/09/2050 யைப் பார்த்த‌தும் த‌லைமை ம‌ருத்துவ‌ர் சாம் ம‌ன‌ம் க‌வ‌லையில் ஆழ்கிற‌து.
"ஹ்ம்ம்.தாத்தாவை அட்மிட் ப‌ண்ணி ஒரு மாச‌ம் ஆயிடுச்சு.இன்னும் அவரை நம்மால் குணப்படுத்த முடியவில்லையே.இந்நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் அவர் காப்பாற்ற முடியாத அபாய கட்டத்தை எட்டி விடுவாரே"
பெற்றோரை இழ‌ந்த தம்மை சிறு வ‌ய‌து முத‌ல் உயிராய் வ‌ளர்த்து, ப‌டிக்க‌ வைத்து, நல்ல நிலைமையில் வைத்ததற்கு அவருக்கு செய்யும் நன்றிக்கடன் இதுதானா என அவரது மனக்குதிரை தறிகெட்டு ஓடுகிறது.
அவ‌ர‌து இமெயில் அலாரம் ஒலிக்கிற‌து.அதில் அவ‌ருக்கு கிடைத்த‌ செய்தி.உல‌கின் த‌லைசிற‌ந்த‌ ம‌ருத்துவ‌ர் ஒருவ‌ரிட‌ம் அவ‌ர‌து தாத்தாவின் மெடிக‌ல் ரிப்போர்ட்டை ரெப‌ர் செய்தத‌‌ன் ப‌ல‌னாக‌ கிடைத்த‌ அம்ம‌ருத்துவ‌ரின் க‌ன்ச‌ல்டேஷன் ரிப்போர்ட்.
அதில்
"இந்நோயை குண‌ப்ப‌டுத்த‌ கோக‌ஸ் நியூசிபெரா என்னும் மூலிகையால் ம‌ட்டுமே முடியும்.அம்மூலிகை காயின் நீரினை மரத்திலிருந்து பறித்த உடனே ரத்தக் குழாயில் செலுத்துவதால் இந்நோய் முழுமையாக குணமடையும்" என்னும் வ‌ரிக‌ளைப் பார்த்த‌தும் அவ‌ர‌து ம‌ன‌ம் ச்ந்தோஷ‌த்தில் துள்ளிக் குதிக்க ஆர‌ம்பிகிறது.
தேங்க் காட்! எப்ப‌டியோ ஒரு ம‌ருந்து கிடைத்துவிடும் என்னும் ந‌ம்பிக்கையில் அம்மூலிகையின் விவ‌ர‌ங்க‌ளைத் தேடுகிறார்.ஆங்கில‌ ம‌ருத்துவ‌ம்,இந்திய‌ ம‌ருத்துவ‌ம் எல்லா ம‌ருத்துவ‌முறைக‌ளையும் தேடி  சாம் பெற்ற விவ‌ர‌ங்க‌ள்.
 சில பத்தாண்டுக‌ளுக்கு முன் இம்மூலிகை ப‌ர‌வ‌லாக‌ விளைந்தது.பின்ன‌ர் ம‌க்க‌ளின் சுற்றுப்புறச் சூழல் விழிப்புண‌ர்வு குறைவால் இத‌ன் விளைச்ச‌ல் நின்று போய்விட்ட‌து. உல‌கில் மிக‌ச்சில‌ இட‌ங்க‌ளில் அரிதாக‌வே கிடைகிற‌து.சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ரே ப‌திவு செய்துவைத்தால் ம‌ட்டுமே தூய்மையான‌ மூலிகை நீர் கிடைக்கும்.

என்ன‌ செய்வ‌தென‌ப் புரியாத‌ சாம் த‌ன் தாத்தாவிட‌மே சென்றார்.தாத்தாவின் க‌ட‌ந்த‌ கால‌ மூலிகை அறிவு ஏதேனும் வ‌ழி சொல்லும் என்னும் ந‌ம்பிக்கையுட‌ன்.

தாத்தா! உங்க‌ளுக்கு என்ன‌ ம‌ருந்து கொடுக்க‌லாம்ன்னு எக்ஸ்ப‌ர்ட் ஒபீனிய‌ன் குடுத்துருக்கார் தாத்தா.அவ‌ர் கோக‌ஸ் நியூசிபெரான்னு ஒரு மூலிகை பேர் சொல்லி இருக்கார்.அது குடுத்தா உட‌னே குண‌மாகிடும்ன்னு சொல்றார்.இல்லன்னா கஉயிருக்கே ஆபத்து ஆகிடும்ன்னு சொல்றார்.ஆனால் அது உல‌க‌த்துல‌ எங்க‌ தேடினாலும் உட‌னே கிடைக்காதாம்.சில‌ மாத‌ங்க‌ளாவ‌து ஆகுமாம்.உங்க‌ளுக்கு இந்த‌ மூலிகை ந‌ம்ம‌ ப‌க்க‌ம் எங்கும் விளையுமான்னு தெரியுமான்னு பாருங்க‌ தாத்தா

அந்த‌ப் பேர் நான் கேட்டதில்லையேப்பா..
பேர் தெரிய‌லின்னா ப‌ர‌வாயில்ல‌ தாத்தா, அம்மூலிகை மரத்தோட ப‌ட‌ம் காட்ட‌றேன் பாருங்க‌.

காட்டு! என‌ப் பார்த்த தாத்தா ராஜாவின் க‌ண்ணில் தெரிந்தது தென்னை ம‌ர‌ம்.
அதையும் தாண்டி அவ‌ர‌து ம‌ன‌க்க‌ண்ணில் தெரிந்த‌து அவ‌ர‌து இள‌மை ப‌ருவ‌த்தில் அவ‌ரது குடும்ப‌த்துக்குச் சொந்தமாயிருந்து,அவரது ப‌ண‌த்தாசையால் த‌ன் த‌ந்தையின் சொல்லை மீறி அழிக்க‌ப்ப‌ட்டு,வீட்டு நிலமாகி அபார்ட்மெண்ட் ஆகிப்போன‌‌ தென்ன‌ந்தோப்பு..

.

4 comments:

எல் கே said...

தேங்காய்க்கு இவ்ளோ டிமான்ட் வருமா ?? நினச்சாலே பயமா இருக்கே

அருண் பிரசாத் said...

நல்ல தொடக்கம்... தொடர்ந்து எழுதுங்க

கவின் இசை said...

Thanks அருண் பிரசாத்

சாந்தி மாரியப்பன் said...

விளைநிலங்களெல்லாம் வீட்டுமனைகளா ஆக்கிக்கிட்டு இருந்தா இந்த நிலையும் ஒரு நாள் வரும்..

@எல்.கே... எங்கூர்ல இப்பவே ஒரு தேங்கா 16 ரூபா ஆகிடுச்சு :-))