Wednesday, December 8, 2010

பென் ஸ்டாண்ட் செய்முறை

நம் அன்புக்குரியவர்களுக்கு பரிசு கொடுக்கும்போது அது சிறிய பொருளாக இருந்தாலும், நம் பங்களிப்பு அதில் இருக்கும் போது அதிக மகிழ்ச்சி தருவதாகவே உள்ளது.

மிகக் குறைந்த செலவில் சின்ன சின்ன பரிசுப் பொருட்கள் செய்யும் முறையை சொல்லித்தருகிறேன்.


பாப்பி குச்சிக‌ள் என‌ப்ப‌டும் ஐஸ்கிரீம் குச்சிக‌ள்  30
பெவிகால்  தேவையான‌ அள‌வு
துருவிய‌ சோப் அல்ல‌து மைதாமாவு   1 க‌ப்
தெர்மோகோல்
க‌ல‌ர் ப‌வுட‌ர் உங்க‌ள் விருப்ப‌மான‌ க‌ல‌ர்க‌ளில்  10 கிராம்
கலர் பவுடர்க்கு  பதிலாக கட்டிப்பட்டுப் போன இங்க் கூடப் பயன்படுத்தலாம்

7 ஐஸ் குச்சிகளை ஒன்றன் அருகில் மற்றொன்று வைத்து பெவிகால் கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.சற்று நேரம் காயவிடவும்.ஒரு குச்சியை குறுக்கு வாக்கில் அதன் மேல் வைத்து ஒட்டி விடவும். இது பார்ப்பதற்கு பலகை போலத் தோன்றும்.
இதேபோல 4 பலகைகள் செய்யவும்.

குறுக்கில் ஒட்டிய குச்சி உள் பக்கம் இருக்குமாறு நான்கு பலகைகளையும் சதுர வடிவில் வைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி விடவும்.தெர்மோகோல் ஒரு பகுதியை சதுர வடிவில் பென் ஸ்டாண்டின் அளவுக்கேற்றவாறு கட் செய்து அதனை பென் ஸ்டாண்டின் அடிப்பகுதியில் பெவிகால் துணையுடன் ஒட்டி விடவும்பென்ஸ்டாண்ட் தயார்.

துருவிய சோப் அல்லது மைதா  மாவுடன் தேவையான வண்ணம்,பெவிகால் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

சுண்டைக்காய் அளவு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
உருண்டையை நீளவாக்கில் இழுத்து பூ இதழ் போலச் செய்யவும்.இதேபோல் 5 இதழ்கள் செய்து பென்ஸ்டாண்டின் ஏதேனும் ஒரு பக்கத்தில் ஒட்டி விடவும்.இதேபோல் இலைகள் காம்பு போன்றவையும் செய்து ஒட்டி விடவும்.
பென் ஸ்டாண்டின் மற்ற பகுதிகளுக்கு விரும்பும் வண்ணம் பூசவும்

1 comment:

எல் கே said...

அட நல்லா இருக்கே.. பகிர்வுக்கு நன்றி