Sunday, November 7, 2010

தமிழ் போல இழிபடுவ‌து

தாய்த் தமிழ் நமக்கு கேவலமா?
 அண்மையில் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த விவாதம் தமிழ் ஆசிரியர்களை மாணவர்களுக்குப் பிடிக்கிறதா என்பதைப் பற்றி."யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபொல் இனிதாவதெங்கும் காணோம்" எனச் சிலாகிக்கப்பட்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழ் கற்றுக் கொடுப்பவர்களைப் பற்றி கேவலமாக விமர்சிக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது.இதே போன்ற விமர்சங்களை வேறு துறை ஆசிரியர்கள் பற்றி பொதுவில் வைக்கத் துணிவுள்ளதா இவர்களிடம்.
தமிழ் ஆசிரியர்கள் மீது இவர்கள் வைக்கும் விமர்சனங்கள்
1.2.தமிழில் பேசச் சொல்கிறார்கள்
ஆம்.அவர்கள் தமிழில் பேசச் சொல்வது,ஒரு மொழியையாவது நீ உருப்படியாய் கற்றுக் கொள்ள.எந்தத் தமிழ் ஆசிரியராவது தமிழை மற்றும் கற்றுக் கொள்.ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறாதே என்று சொன்னார்களா? ஆங்கில ஆசிரியர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசச் சொன்னால் வராத கோவம் தமிழ் ஆசிரியர்களிட‌த்தில் மட்டுமே வருவது ஏனோ?
கணினித் துறையின் மனித வள மேம்பாட்டுத்துறையில் சொல்வார்கள்.வேறு துறை மாணவனை பணிக்குத் தேர்ந்தெடுக்கும்போது அவனது துறை சார்ந்த அறிவை சோதிப்பது,கண்ணி அறிவை சோதிப்பதிலும் மிக முக்கியம் ஏனெனில் அதன் மூலமே அவனது உண்மையான கற்கும் திறனை அறிய முடியும்.அதேபோல தமிழ் ஆசிரியர்கள் சொல்வது ஒரு மொழியை ஒழுங்காக கற்றுக் கொண்டால் அதனை வைத்து மற்று எத்தனை மொழிகளையும் சுலபமாகக் கற்கலாம்.உன் சொந்தக் கண் மூலம் பார் எனபது ஆசான்கள் காட்டும் வழி.இரவல் கண்ணாடி மூலம் தான் பார்ப்பேன் என்பது விதண்டாவாதம்.
2.தமிழ் கற்பதால் பயன் இல்லை
இன்றைய உலகை சற்று தொலை நோக்குங்கள்.அனைத்து துறைச் செய்திகளையும் தமிழ்படுத்தும் முறைமைகள் பரவலாகத் தொடங்கிவிட்டன.அதனில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டாலே போதும் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு அமையும்.
தமிழின் அருமையை உணர வேண்டுமானால்,தமிழ் புழங்காத வெளி நாட்டில் வாழும் ஒரு தமிழனிடம் பேசிப் பாருங்கள்.அப்போது புரியும் தமிழின், தமிழ் ஆசிரியர்களின் அருமையும் பெருமையும்

.

1 comment:

எல் கே said...

முதலில் வீட்டில் உள்ளவர்கள் மாற வேண்டும். தான் மகன்/மகள் டாடி, மாம்மி என்று அழைப்பதையே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகின்றனர். தங்கள் குழந்தைகள் வீட்டில் தமிழ் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த நிலை மாறும்