Friday, November 12, 2010

எடை குறைப்பு மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சை முறைகள்

உடல் எடையைக் குறைப்பதற்கும், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கும் உலகின் பெரும்பாலான மனிதர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்.அதில் வெற்றி பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.சிலர் இதை குணப்படுத்துவதாகக் கூறும் பணம் பறிக்கும் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு ஏமாந்து போவதும் உண்டு.
இதற்கு இரண்டே வழிமுறைகள் தான் உள்ளன.
1.உணவுக்கட்டுப்பாடு
2.உடற்பயிற்சி
இவை இரண்டையும் பின்பற்றுவது பலருக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது.உளவியல் ரீதியிலான சில வழிமுறைகள் இதனை எளிதாக்கும்.

உணவுக் கட்டுப்பாடு என்பதை இரு வகைகளில் பின்பற்றலாம்.
1.உணவை ஒரே சமயத்தில் அதிக அளவு உண்ணாமல் பிரித்து பிரித்து உண்பது

ஆனால் உண்ணும்போது வயிறு நிறைய வேண்டும் என்னும் திருப்திக்காகவே, உண்ணும்  உணவைக் குறைக்க முடியாமல் தவிப்பவர் ஏராளம். சிறிது உண்ட உடனேயே உங்கள் வயிறு நிறைந்துவிட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.அவ்ளோதான்.இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாது என்று உங்கள் மனதிற்குள் சொல்லிக் கொண்டே சாப்பிடுங்கள்.சிறிது உணவிலேயே வயிறு நிறைந்த திருப்தி  ஏற்படும்.பசிக்கும் போதெல்லாம் இதே வழிமுறையைப் பின்பற்றுங்கள்.உணவின் அளவு கண்டிப்பாய் குறையும்.

2.கொழுப்பு ச‌த்து நிறைந்த‌ உண‌வினைத் த‌விர்த்தல்.
 சாக்லேட்,இனிப்பு வ‌கைக‌ள்,ஐஸ்கிரீம் போன்ற‌வ‌ற்றைக் காணும் போதே அத‌னுள் அட‌ங்கியுள்ள‌ கொழுப்பு ச‌த்து,க‌லோரி அள‌வைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள். ஒரு  சாக்லேட்டினால் அதிக‌ரிக்கும் க‌லோரிக்காக‌ நீங்க‌ள் அடிஷ‌ன‌லாக‌ செய்ய‌ வேண்டிய‌ உட‌ற்பயிற்சியின் அள‌வையும் அவ்வாறு செய்ய‌த்த‌வ‌றினால் அதிக‌ரிக்கும் உட‌ல் எடை அல்லது ச‌ர்க்க‌ரை அள‌வு அதிக‌ரிப்பை யோசியுங்க‌ள். கொழுப்பு ச‌த்து உண‌வுக‌ள் மீதான‌ மோக‌ம் ப‌டிப்ப‌டியாக‌க் குறையும்.


அடுத்த‌ முக்கிய‌ கார‌ணி உட‌ற்ப‌யிற்சி.

இத‌ற்காக‌ நேர‌ம் ஒதுக்குவ‌து மிக‌க் க‌டின‌மான‌ காரிய‌ம். அதிகாலை வாக்கிங் மிக‌ச் சிற‌ந்த‌ உட‌ற்ப‌யிற்சி.ஆனால் அத‌ற்காக‌ அதிகாலையில் உற‌க்க‌த்தை விட்டு எழுவ‌திலும் பெரும் கொடுமையாக வேறெதுவும் தோன்றுவ‌தில்லை.இத‌னை த‌விர்க்க‌ உங்க‌ள் வாக்கிங்குட‌ன் ஏதேனும் ஒரு வேலையை இணைத்துக் கொள்ளுங்க‌ள். அதிகாலையில் ந‌ட‌ந்து சென்று பூஜைக்கு ம‌ல‌ர் கொண்டுவ‌ருவ‌து,வீட்டிற்குத் தேவையான‌ சிறு பொருட்க‌ள் ஏதும் வாங்குவ‌து போன்ற‌வை ந‌டைப‌யிற்சியைக் க‌ட்டாய‌மாக்கிவிடும்.ஆனால் இதே போல‌ வாங்கும் பொருட்க‌ள் சிறிய‌தாக‌வும் ந‌டைப் ப‌யிற்சிகு த‌டை ஏற்ப‌டுத்தாமலும் இருக்க‌ வேண்டும்.கிலோ க‌ண‌க்கில் எடையுள்ள‌வ‌ற்றை தூக்கிக் கொண்டு ந‌டை ப‌யிற்சி மேற்கொள்வ‌து ப‌ல‌னளிக்காது.

Think Smart.Stay Fit

.

4 comments:

எல் கே said...

பயனுள்ள தகவல். நீரிழிவு நோயால் அவதிபடுவர் எனில் கடலை சம்பந்தப் பட்ட உணவுகளை தவிர்த்தல் நலம்

THOPPITHOPPI said...

பயனுள்ள தகவல். தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்

ஹரிஸ் Harish said...

நல்ல பதிவு..பயனுள்ள தகவல்கள்..தொடருங்கள்..

அருண் பிரசாத் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_04.html


நன்றி