Tuesday, November 9, 2010

குழந்தைகளை உண்மையிலேயே "வளர்க்கிறீர்களா"?

குழந்தை வளர்ப்பு என்பது உடல் வளர்ச்சியையும் வயது அதிகரித்தலையும் மட்டும் குறிப்பதல்ல.சமுதாயத்தையும்,எதிர்காலத்தையும் சந்திக்க மனரீதியாக அவர்களைத் தயார்ப்படுத்தலையும் குறிக்கும்.அத்தகைய தயார்படுத்தலை இந்த அவசர உலகில் பெரும்பாலான பெற்றோர் தவறவிடுகின்றனர்.அதனாலேயே பல குழந்தைகள்  பெரும் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.
அத்தகைய தயார்படுத்த நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை சில‌
1.அவர்கள் சிறு,சிறு தவறுகள் செய்யும்போது,அச்செயலின் பின்விளைவுகளை அவர்களுக்கு புரியும்படி எடுத்துரைக்க வேண்டும்.அவ்வாறல்லாமல் பொதுவாக அவர்களை "அப்படிச் செய்யாதே" எனமிரட்டுவதும்,தண்டிப்பதும் பெற்றோருக்குத் தெரியாமல் அச்செயலைச் செய்யவே தூண்டும்.
அதே தவறுகளை திரும்ப திரும்பச் செய்தால் மட்டுமே தண்டனை என்னும் முயற்சியைத் தொடங்க வேண்டும்

2.வீட்டின் பெரியவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள்,நெகடிவ் பழக்க வழக்கங்கள் குழந்தைகளுக்கு அறியத் தருவது பெரியவர்களின் மீதான குழந்தைகளின் நல்லெண்ணத்தைக் குலைக்கும்
3.போட்டி நிறைந்த உலகத்தில் அடுத்த குழந்தைகளுடனான ஒப்பீடு தவிர்க்க முடியாதது.அதனை பாசிடிவ் ஒப்பீடாகச் செய்யலாம்."அந்தக் குழந்தையைப் போல நீ இல்லை" எனச் சொல்வதை விட,அந்தக் குழந்தை மாதிரி அடுத்த முறை நீ வெல்வாய் எனச் சொல்வது நன்மையளிக்கும்
4.குழந்தைகளின் எவற்றாயெல்லாம் செய்யக் கூடாது என நினைக்கிறோமோ அவற்றையெல்லாம் நாமும் தவிர்க்க வேண்டும்.உதாரணமாக, நீ போய் படி எனக் கூறிவிட்டு நான் தொலைக்காட்சியில் மூழ்கக் கூடாது
5.அவர்கள் பேச வரும் விஷயங்களை நாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.அவர்கள் தவறே செய்தாலும்,அதை நம்மிடம் ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கும் தைரியத்தை நாம் தான் அவர்களுக்குத் தர வேண்டும்.
பெற்றோரின் அனுபவ‌த்தில்,இதனினும் பெரிய பாடங்கள் எல்லாம் கற்றுக் கொண்டிருப்பீர்கள்.எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளை எழுதியிருக்கிறேன்.உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

.

1 comment:

எல் கே said...

நல்ல பகிர்வு. நீங்கள் சொன்னது போல் மனதளவிலும் நாம் தயார் படுத்த வேண்டும். இல்லை என்றால் கடினம்தான். வாழ்த்துக்கள்